மேலும் செய்திகள்
டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி
21-Apr-2025
திருப்புவனம்: திருப்புவனம் அருகே பரமக்குடி --- மதுரை நான்கு வழிச் சாலையில் டூவீலர் மீது கார் மோதியதில் கட்டட தொழிலாளர்கள் இருவர் பலியாயினர்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழராங்கியத்தைச் சேர்ந்தவர் ராம்பாண்டி 50.மடப்புரத்தைச் சேர்ந்தவர் அய்யணன் 55.கட்டட தொழிலாளிகளான இருவரும் வன்னிகோட்டை சென்று விட்டு நேற்று காலை 10:15 மணிக்கு டூவீலரில் திருப்புவனம் வந்தனர்.(ஹெல்மெட் அணியவில்லை)பரமக்குடி-- மதுரை நான்கு வழிச்சாலையில் தவளைக்குளம் விலக்கு அருகே வந்தபோது பின்னால் இளையான்குடியில் இருந்து மதுரை சென்ற கார் மோதியது. இதில் டூவீலரில் வந்த இருவரும் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடல்களை கைப்பற்றி கார் டிரைவர் இளையான்குடி ஜான்முகமதுவிடம் 65, திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Apr-2025