உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு

அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு

கீழச்சிவல்பட்டி; விராமதி மந்தையம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. கிராமத்தினர் கோயிலில் சுவாமி வழிபாடு முடிந்த பின்னர் காலை 11:00 மணி அளவில் தொழுவிலிருந்து காளைகள் அவிழ்ப்பு துவங்கியது. 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் 2 பேர் காயமடைந்தனர். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதால் ஏற்பாட்டாளர்கள் 5 பேர் மீது கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை