உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விபத்தில் அடையாளம்  தெரியாத நபர் பலி

விபத்தில் அடையாளம்  தெரியாத நபர் பலி

சிவகங்கை: சிவகங்கை அருகே சாமியார்பட்டி விலக்கு பகுதியில் மானாமதுரை ரோட்டில் 60 வயது மதிக்க தக்க ஒருவர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு நடந்து சென்றார். அவரை அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் பலியானார். உடலை மீட்ட போலீசார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலவாணியங்குடி வி.ஏ.ஓ., ரஞ்சித்குமார் விபத்து குறித்து நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து இறந்த நபர் குறித்தும் விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை