மேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய எழுத்துத்தேர்வு
36 minutes ago
காரைக்குடி: சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் காரைக்குடியில் நேற்று 5 தேர்வு மையங்களில் நடந்த தேர்வினை 3,774 பேர் எழுதினர். இதில், 555 பேர் பங்கேற்கவில்லை. சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 3,655 போலீஸ் பணியிடங்களுக்கான எழுத்துதேர்வினை நேற்று நடத்தியது. அந்தவகையில் காரைக்குடியில் அழகப்பா அரசு இன்ஜி./, கல்லுாரி, அழகப்பா அரசு கல்லுாரி, டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லுாரி, கம்பன் கற்பகம் மெட்ரிக் பள்ளி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆகிய 5 தேர்வு மையங்களில் நடந்தது. இத்தேர்விற்காக சிவகங்கை மாவட்ட அளவில் 3,392 ஆண்கள், 937 பெண்கள் என 4,329 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தேர்விற்கு வந்தவர்களை பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இத்தேர்வினை நேற்று 3,774 பேர் மட்டுமே எழுதினர். தேர்வில் 555 பேர் பங்கேற்கவில்லை. சிறப்பு தேர்வு தணிக்கை அதிகாரியாக அருளரசு எஸ்.பி., தலைமையில், சிவகங்கை எஸ்.பி., சிவபிரசாத், 3 கூடுதல் எஸ்.பி.,க்கள், 5 டி.எஸ்.பி.,க்கள், 20 இன்ஸ்பெக்டர், 450 போலீசார் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
36 minutes ago