உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரோட்டில் மூடப்படாத குழிகளால் விபத்து அபாயம்

ரோட்டில் மூடப்படாத குழிகளால் விபத்து அபாயம்

திருப்புத்துார்:திருப்புத்துார் மதுரை ரோடு- சிங்கம்புணரி ரோடுகளை இணைக்கும் ரோட்டில் குடிநீர் குழாய் பராமரிப்பிற்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. திருப்புத்துார் புதுத்தெரு இணைப்புச்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ள ரோடு ஆகும். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குடிநீர் குழாயில் ஏற்பட்ட விரிசலை அடைக்க பராமரிப்பு பணி நடந்தது. ரோட்டில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படவில்லை. சரியான எச்சரிக்கை அறிவிப்பும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த ரோட்டில் செல்பவர்கள் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் பராமரிக்க தோண்டிய பள்ளங்களை விரைவாக மூடி ரோட்டை சீரமைக்க அப்பகுதியினர் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ