உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடியில் போலீஸ் ஸ்டேஷன் பணிகளை தொடங்க வலியுறுத்தல்

கீழடியில் போலீஸ் ஸ்டேஷன் பணிகளை தொடங்க வலியுறுத்தல்

கீழடி : கீழடியில் போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்படும் என காவல் துறை மானிய கோரிக்கையில் தெரிவித்துள்ள நிலையில் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் கீழடியில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஏற்ப இரண்டு கோடியே 83 லட்ச ரூபாய் செலவில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே கீழடியில் கடந்தாண்டு மாவட்ட கலெக்டரின் கனிம வள நிதியில் 24 லட்ச ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் காவல் துறை பயன்பாட்டிற்கு என புதிய கட்டடம் கட்டப்பட்டு இன்று வரை திறக்கப்படவில்லை.முதல்வர் சட்டசபையில் அறிவித்தற்கு ஏற்ப சொந்த கட்டடம் கட்டும் வரை காவல்துறை கட்டடத்தில் புதிய போலீஸ் ஸ்டேஷன் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தினசரி இரண்டாயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் அருங்காட்சியகத்தில் உள்ள இரு போலீசாரால் சமாளிக்க முடியவில்லை. அருங்காட்சியகத்தை காண தினசரி முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் நிலையில் கீழடியில் போலீஸ் ஸ்டேஷன் திறப்பது அவசியம். எனவே தமிழக அரசு கீழடியில் போலீஸ் ஸ்டேஷன் திறக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை