உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை தாலுகாவில் விடுபட்ட கிராமங்களை இணைக்க வலியுறுத்தல்

மானாமதுரை தாலுகாவில் விடுபட்ட கிராமங்களை இணைக்க வலியுறுத்தல்

மானாமதுரை: காளையார்கோயில் தாலுகாவிலிருந்து மானாமதுரை தாலுகாவோடு இணைக்க விடுபட்ட 2 கிராமங்களை இணைக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.சிவகங்கை தாலுகாவிலிருந்து காளையார் கோயில் தாலுகா உருவானபோது மானாமதுரை அருகே உள்ள புளியங்குளம் குரூப்பிற்குட்பட்ட விளாக்குளம்,பில்லத்தி, கீழ மாயாளி,மேல மாயாளி,புளியங்குளம், ஆகிய கிராமங்களும் கே,பெருங்கரை குரூப்பிற்குட்பட்ட கே,பெருங்கரை, என்.பெருங்கரை,வேலானி ஆகிய கிராமங்களும்,கீழப்பிடாவூர் குரூப்பிற்குட்பட்ட கீழப்படாவூர் உள்ளிட்ட 9 கிராமங்கள் காளையார்கோயில் தாலுகாவோடு இணைக்கப்பட்டன.இக் கிராமங்களில் என்.பெருங்கரை,பில்லத்தி ஆகிய 2 கிராமங்களை தவிர மற்ற 7 கிராமங்களுக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட மற்ற அலுவலகங்கள் மானாமதுரையில் உள்ளன.மேலும் இக்கிராமங்களிலிருந்து மானாமதுரை செல்வதற்கு 7 கி.மீ.,துாரமே உள்ள நிலையில், காளையார்கோயில் செல்வதற்கு 3 பஸ்கள் மாறி 54 கிலோமீட்டர் செல்ல வேண்டிய நிலை இருந்ததால் மேற்கண்ட கிராம மக்கள் 9 கிராமங்களையும் மானாமதுரை தாலுகாவோடு இணைக்க வேண்டுமென்று பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.பில்லத்தி விவசாய சங்க நிர்வாகி கிருஷ்ணத்தேவர் மதுரை ஐகோர்ட் கிளையிலும் வழக்கு தொடர்ந்தார்.இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் பில்லத்தி,என்.பெருங்கரை கிராமங்களை தவிர மற்ற 7 கிராமங்களையும் மானாமதுரை தாலுகாவோடு இணைக்க உத்தரவிடப்பட்டது. விவசாய சங்க நிர்வாகி பில்லத்தி கிருஷ்ணதேவர் மற்றும் பில்லத்தி, என்.பெருங்கரை கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித்தை சந்தித்து மேற்கண்ட 2 கிராமங்களையும் மானாமதுரை தாலுகாவோடு இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி