மேலும் செய்திகள்
விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
20-Aug-2025
எஸ்.புதுார்: எஸ்.புதுார் ஒன்றியத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் பணியிடம் காலி செய்யப்பட்டதால் விவசாயிகள் வீண் அலைச் சலுக்கு ஆளாகின்றனர். ஒருங்கிணைந்த சிங்கம் புணரி ஒன்றியத்தை பிரித்து 1992 ல் எஸ்.புதுார் ஒன்றியம் புதிதாக துவக்கப்பட்டது. அப்போது எஸ்.புதுாரில் தனியாக வேளாண்மை, தோட்டக்கலை அலுவலகங்கள் உருவாக்கப்பட்டு இரண்டு துறைகளுக்கும் உதவி இயக்குனர்கள் பணியமர்த்தப்பட்டனர். எஸ்.புதுார் ஒன்றியத்தை பொருத்தவரை 5000 எக்டேருக்கும் மேற்பட்ட பரப்பில் நெல், கடலை, உளுந்து மற்றும் சிறுதானிய பயிர்களும், 4000 எக்டேருக்கும் மேற்பட்ட பரப்பில் மிளகாய், கத்தரி, தக்காளி, தென்னை உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்படு கின்றன. இவ்வொன்றியத்தில் நெல் சாகுபடி பரப்பு குறைவாக இருப்பதாக கூறி அங்கிருந்த வேளாண்மை உதவி இயக்குனர் பணியிடம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் காலி செய்யப்பட்டு சிங்கம்புணரி அலுவலகத் துடன் இணைக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் அரசின் மானியம், நிதி, திட்டங்கள் தொடர்பாக வேளாண்மை உதவி இயக்குனரை சந்திக்க 20 முதல் 50 கி.மீ., தூரம் பயணித்து வீண் அலைச்சலுக்கு ஆளாகின்றனர். தமிழகம் முழுவதும் அரசின் கொள்கை முடிவாக, பல்வேறு இடங்களில் சாகுபடி பரப்பு குறைந்த இடங்களில் இது போன்ற பணியிடங்கள் காலி செய்யப்பட்டு அருகே உள்ள அலுவலகத்துடன் இணைக்கப் பட்டது. ஆனால் எஸ்.புதூரில் முழுவதும் விவசாய மற்றும் விவசாய சார்ந்த தொழில்களே உள்ளன. எனவே எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு கொள்கை முடிவில் இருந்து விலக்கு அறிவித்து, காலி செய்யப்பட்ட வேளாண் உதவி இயக்குனர் பணியிடத்தை மீண்டும் உருவாக்கிய அப்பகுதி விவசாயிகள் வலி யுறுத்தி உள்ளனர்.
20-Aug-2025