உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  தெரு நாய்களுக்கு தடுப்பூசி: களம் இறங்கிய நகராட்சி

 தெரு நாய்களுக்கு தடுப்பூசி: களம் இறங்கிய நகராட்சி

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் தெரு நாய்களை பிடித்து நகராட்சி ஊழியர்கள் கால்நடைத்துறை உதவியுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். சிவகங்கை நகராட்சியில் தெரு நாய்கள் அதிகரித்து விட்டன. பெண்கள் முதியோர் மற்றும் குழந்தைகளை துரத்தி கடிக்கின்றன. நவ.15 தேர்தல் பிரிவு தாசில்தார் மேசியதாஸ் நடைபயிற்சி சென்றபோது தெரு நாய் ஒன்று அவரை கடித்தது. அதன் பின்னர் கலெக்டர் பொற்கொடி நகராட்சியில் திரியும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த கூறி நகராட்சி கமிஷனர் அசோக்குமார், மற்றும் கால்நடைத்துறை இணை இயக்குநர் நந்தகோபால் ஆகியோருக்கு உத்தர விட்டார். அதன் பின்னர் நகரில் தினம் தோறும் தெரு நாய்களை விரட்டி பிடித்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனாலும் மஜித்ரோடு, தாலுகா அலுவலக ரோட்டில் உள்ள மாமிச கடைகளின் முன்பாக தெருநாய்கள் நோய்வாய் பட்டு திரிகிறது. தோல் முழுவதும் பாதிக்கப்பட்டு பார்த்தாலே அச்சம் வரக்கூடிய சூழலில் ரோட்டில் நாய்கள் திரிவதால் அந்த பகுதியை கடந்து செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். அவ்வாறு திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். அந்த நாய்களுக்கு கழிவு மாமிசங்களை வழங்கும் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்க வேண்டும். இரவு நேரங்களில் டூவீலரில் செல்வர்களை இந்த நாய்கள் விரட்டி கடிக்க வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நகராட்சி சுகாதார அலுவலர் நல்லுச்சாமி கூறுகையில், நகரில் 749 தெரு நாய்கள் உள்ளது. கமிஷனர் மேற்பார்வையில் தினசரி 10 முதல் 20 நாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்தி வருகிறோம். இதுவரை 360 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை