உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடி கண்மாய்களுக்கு வந்து சேராத வைகை ஆற்று நீர்; 1000 ஏக்கர் நிலம் பாதிப்பு

இளையான்குடி கண்மாய்களுக்கு வந்து சேராத வைகை ஆற்று நீர்; 1000 ஏக்கர் நிலம் பாதிப்பு

இளையான்குடி : இளையான்குடி அருகே 4 கிராம கண்மாய்களுக்கு வைகை ஆற்று நீரை பொதுப்பணித்துறையினர் திறந்து விடாததால், ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாகும் என கவலை தெரிவிக்கின்றனர்.வைகை பூர்வீக பாசனப்பகுதி நிலங்களில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் நவ. 10 முதல் நவ.18 வரை என 1830 கன அடி திறக்க வேண்டும். இதற்காக பார்த்திபனூர் மதகு அணையிலிருந்து இடது பிரதான கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீரில் இளையான்குடி பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு இளையான்குடி பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக பங்கீடு செய்து அனுப்பாமல் பாரபட்சம் காட்டியுள்ளனர். இதனால், இடது பிரதான கால்வாயில் சாலைக்கிராமம் மெயின் கால்வாயிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய பெரும்பாலை, அரியாண்டிபுரம், அரணையூர், கருஞ்சுத்தி கண்மாய்களுக்கு முறையாக தண்ணீர் பங்கீட்டினை வழங்கவில்லை. ஏற்கனவே பெய்த மழைக்கு இக்கண்மாய்களில் சொற்ப அளவில் தான் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்ய முடியாதநிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.இது குறித்துவிவசாயிகள் கூறியதாவது, இக்கண்மாய்க்கு செல்லும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக வைகை தண்ணீரை பங்கிட்டு தர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை