உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை சந்தையில் காய்கறிகள் விலை சரிவு

மானாமதுரை சந்தையில் காய்கறிகள் விலை சரிவு

மானாமதுரை: மானாமதுரையில் வியாழக்கிழமை சந்தை நடைபெறுகிறது. 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்கின்றனர்.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இங்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி,வெங்காயம் உள்ளிட்ட காய்கறி விலை உயர்ந்து காணப்பட்டது. தற்போது கடந்த சில நாட்களாக 6கிலோ தக்காளி ரூ.100க்கும், வெங்காயம் 4கிலோ ரூ.100க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.50க்கும்,பச்சை மிளகாய், முள்ளங்கி, கேரட்,அவரை,சவ் சவ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் ரூபாய் 40-க்கும்,பட்டர்,சோயா பீன்ஸ் வகைகள் ரூ.140க்கும், விற்பனை செய்யப்படுவதால் பெண்கள் மகிழ்ச்சியுடன் அதிக அளவில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.வியாபாரிகள் சிலர் கூறியதாவது: காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை பெருமளவு குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இன்னும் சில வாரங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்பதால் தொடர்ந்து விலை குறையும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை