உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இருளில் நான்கு சாலை சந்திப்பு; விபத்தில் சிக்கும் வாகனங்கள்

இருளில் நான்கு சாலை சந்திப்பு; விபத்தில் சிக்கும் வாகனங்கள்

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கல்லுார் நான்கு சாலை சந்திப்பு, இருளில் மூழ்கிக்கிடப்பதால் இரவில் விபத்து அபாயம் நிலவி வருகிறது.பள்ளத்துார் பேரூராட்சியில் 20க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. இங்குள்ள அரிசி ஆலைகளுக்கு காஞ்சிபுரம், ஆவுடையார்கோவில், தஞ்சை, திருவாடானை, புதுக்கோட்டை பட்டுக்கோட்டை மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நெல் அரவைக்காக கொண்டு வரப்படுகிறது. மேலும், பள்ளத்துார்-கல்லுார் சாலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இச்சாலையில் தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன.பள்ளத்துார் கொத்தமங்கலம் கல்லூர் செட்டிநாடு செல்லும் நான்கு சந்திப்பு சாலை முக்கிய சாலையாக உள்ளது. இரவு நேரங்களில் அதிக வாகனங்கள் செல்லும் இச்சாலைகளில் போதிய மின்விளக்கு வசதி இல்லை. அடிக்கடி விபத்து அபாயம் நிலவுகிறது. தவிர இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் அச்சத்துடனே இச்சாலையை கடக்க வேண்டியுள்ளது. விபத்தை தடுக்க நான்கு சாலை சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ