மேலும் செய்திகள்
ஆதிக்கம் செலுத்திய சீன நிறுவனங்கள்
15-Dec-2024
காரைக்குடி : காரைக்குடி, பள்ளத்துார் கானாடுகாத்தான், இலுப்பக்குடி, அரியக்குடி, மாத்துார், ஆத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக திரிகிறது. வீடுகளிலும் கடைகளிலும் பொருட்களை துாக்கிச் செல்கிறது.கிராம மக்கள் கூறுகையில்: குரங்குகளால் வீட்டில் உள்ள பொருட்கள் சேதமாவதோடு மன உளைச்சலுக்கும் ஆளாகிறோம். வனத்துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. குரங்கு பிடிப்பவர்களை தொடர்பு கொள்ளும்படி தெரிவிக்கின்றனர். குரங்கு பிடிப்பவர்கள் பல ஆயிரம் ரூபாய் வரை கேட்கின்றனர். சில கிராமங்களில் பணத்தை கொடுத்து குரங்குகளை பிடிக்கச் சொல்கின்றனர் என்றனர். வனத்துறை கூறுகையில்: குரங்குகளை பிடிக்க மாவட்டம் முழுவதுமே ஏராளமான மனுக்கள் வந்துள்ளன. மனுக்களின் சீனியாரிட்டி படியே குரங்குகள் பிடிக்கப்படும். குரங்குகளை பிடிப்பதற்கான நிதி வருவதற்கு தாமதமாகலாம். இதனால் சிலர் தனியார் மூலம் குரங்குகளை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்கின்றனர். அது போன்று பிடித்தாலும் எங்களது மேற்பார்வையில் தான் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட முடியும் என்றனர்.
15-Dec-2024