உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மயானத்தைச் சுற்றி தேங்கிய கழிவு நீர் தவிக்கும் கிராம மக்கள்

மயானத்தைச் சுற்றி தேங்கிய கழிவு நீர் தவிக்கும் கிராம மக்கள்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே கீழராங்கியம் மயானத்தைச் சுற்றிலும் கண்மாய் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.கீழராங்கியத்தில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கான பொதுமயானம் ஊருக்கு வெளியே அமைந்துள்ளது.மயானத்திற்கு மின்வசதி இல்லாததால் இரவு நேரத்தில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமல் வாடகைக்கு பெட்ரோமேக்ஸ் விளக்கை பயன்படுத்தியே இறுதி சடங்கு செய்ய வேண்டியுள்ளது.மின்வசதி கேட்டு பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மழை காரணமாகவும் வைகை ஆற்றில் நீர் வரத்து காரணமாகவும் கண்மாய்களுக்கு தண்ணீர் சென்ற வண்ணம் உள்ளது.மனக்குளம், சம்பக்குளம் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய், குறுகிய பாலங்களில் அடைப்பு ஏற்பட்டதால் கீழராங்கியன் சுடுகாட்டைச் சுற்றிலும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.இதனால் இறந்தவர்களுக்கு மயானத்தில் இறுதி சடங்கு செய்ய முடியவில்லை. மின்வசதியும் இல்லாததால் இரவு நேரங்களில் சிரமத்திற்கு இடையே உயிரிழந்தவர்களை எரியூட்ட வேண்டியுள்ளது.எனவே கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்து தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ