மேலும் செய்திகள்
மருத்துவமனை வளாகத்தில் தனியார் வாகனங்கள்
09-Mar-2025
மானாமதுரை: மானாமதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுடன் வருபவர்கள் தங்கும் அறையில் தண்ணீர் வசதி இல்லாதததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் 600க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். 20க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.இவர்களுடன் வருபவர்கள் தங்குவதற்காக மருத்துவமனை வளாகத்தில் தேசிய வாழ்வாதார திட்டத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.32 லட்சம் செலவில் போர்வெல் வசதியுடன் தங்கும் அறைகள் கட்டப்பட்டன.தற்போது சில மாதங்களாக போர்வெல் மோட்டார் பழுதடைந்ததை தொடர்ந்து இந்த அறைகளில் தண்ணீர் வசதி இல்லாத காரணத்தினால் உறவினர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தற்போது அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்காக ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த சில கட்டடங்களை இடித்து அகற்றப்பட்டதை தொடர்ந்து அங்கு தங்கி வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தற்போது நோயாளிகளுடன் தங்குபவர்கள் அறைகளில் தங்கி வரும் நிலையில் அவர்களும் தண்ணீர் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.அவசரத்திற்கு கழிப்பறையை கூட பயன்படுத்த முடியவில்லை. நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மாவட்ட நிர்வாகம் உடனடியாக தங்கும் அறைகளில் தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
09-Mar-2025