உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா 

வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா 

சிவகங்கை:வ.உ., சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை அரண்மனைவாசலில் அவரது திருஉருவ படத்திற்கு சர்வ கட்சியினர், வ.உ.சி., பேரவையினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சிவகங்கை வ.உ.சி., பேரவை சார்பில் நடந்த விழாவிற்கு விழா ஏற்பாட்டாளர் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் செல்வரங்கன் வரவேற்பளித்தார். சிவகங்கை எம்.எல்.ஏ., செந்தில்நாதன், நகராட்சி தலைவர் துரை ஆனந்த், காங்., மாநில நிர்வாகி சுந்தரராஜன், மாநில மகளிரணி துணை தலைவர் ஸ்ரீவித்யா, முன்னாள் கவுன்சிலர் சண்முகராஜன், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியநாதன், கோட்ட பொறுப்பாளர் சொக்கலிங்கம், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, நகர் செயலாளர் செந்தில்குமார், அ.தி.மு.க., தொண்டர் மீட்பு குழு இளைஞரணி மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், இந்திய கம்யூ., மருது, ம.தி.மு.க., தீபன் சக்கரவர்த்தி, த.மா.கா., நிர்வாகி ராஜலிங்கம், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் முருகன், முத்துக்கண்ணன், வழக்கறிஞர் ராஜகோபால், தே.மு.தி.க., நிர்வாகி வழக்கறிஞர் சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வ.உ.சி., பேரவையினர் ஏற்பாட்டை செய்திருந்தனர். * மானாமதுரையில் வ.உ.சி., உருவப்படத்திற்கு மானாமதுரை பிள்ளைமார் சங்கத்தைச் சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் சோம சதீஷ்குமார், வக்கீல் முத்துக்குமார் தலைமையில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை