உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழச்சிவல்பட்டியில் கைப்பந்து போட்டி

கீழச்சிவல்பட்டியில் கைப்பந்து போட்டி

திருப்புத்துார், ;கீழச்சிவல்பட்டி எஸ்.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான பள்ளிகளுக்கிடையேயான கைப்பந்து போட்டிகள் நடந்தன. முன்னாள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முருகப்ப ராஜா துவக்கினார். தலைமையாசிரியை கமலம் முன்னிலை வகித்தார்.14 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் கீழச்சிவல்பட்டி எஸ்.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளி முதலிடம், திருப்புத்துார் ஆ.பி.சீ.அ.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்ற-ன. 17 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் திருப்புத்துார் நா.ம.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், எஸ்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் எஸ்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி முதலிடம், ஆ.பி.சீ.அ.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம், 19 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் எஸ்.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளி முதலிடம், ஆ.பி.சீ.அ.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம், 19 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் எஸ்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி முதலிடம், நா.ம.பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளிச் செயலர் வெங்கடாசலம் வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !