காளாப்பூரில் தேங்கும் கழிவு நீர்
சிங்கம்புணரி ; அ.காளாப்பூரில் வீடுகள் முன் தேங்கும் கழிவு நீரால் மக்கள் அவதிப்படுகின்றனர். கிராமத்துக்கு தெருக்களில் கழிவுநீர் கால்வாய் இல்லை. வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவு நீர் அங்கேயே தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. கழிவுநீரில் குப்பை கலந்ததால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவு நீர் கால்வாய்களை அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.