குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர் திருப்புவனத்தில்குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்புவனம்: திருப்புவனத்தில் தொடர்ச்சியாக குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. திருப்புவனத்தில் 18 வார்டுகளிலும் வைகை ஆற்றில் கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது. இந்நிலையில் திருப் புவனத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய புதிதாக குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. மடப்புரத்தில் இருந்து பம்பிங் செய்யப்பட்டு குழாய்கள் மூலம் சிவகங்கை ரோடு வரை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து லாடனேந்தல், கலியாந்தூர், கீழடி உள்ளிட்ட கிராமங் களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த ஒரு வாரமாக சோதனை ரீதியாக தண்ணீர் விநியோகிக்கப் பட்டு வருகிறது. நகரின் பல இடங்களிலும் புதிய குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. திருப்புவனம் புதுார் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே இரு நாட்களுக்கு முன் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதே போல உச்சி மாகாளியம்மன் கோயில் தெரு, யூனியன் அலுவலகம், சேதுபதிநகர் உள்ளிட்ட இடங்களிலும் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. அதிகாரிகள் கூறுகை யில், புதிய குழாய் களில் தண்ணீர் சோதனை ரீதியாக அனுப்பும் போது குழாய் சேதமடைவது வழக்கம். விரைவில் சரி செய்து விடுவோம், என்றனர்.