உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் குடிநீர் சப்ளையில் பாதிப்பு

சிவகங்கையில் குடிநீர் சப்ளையில் பாதிப்பு

சிவகங்கை: சிவகங்கை நகரில் 10 நாட்களுக்கும் மேலாக நகராட்சி சார்பில் குடிநீர் சப்ளை இல்லாததால் பொதுமக்கள் குடிநீர் இன்றி தவிக்கின்றனர்.சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மருதுபாண்டியர் நகரில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் மேல் தேக்க தொட்டி, மதுரை ரோட்டில் 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் மேல் தேக்க தொட்டி, காளவாசல் பகுதியில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் மேல் தேக்க தொட்டி, அம்பேத்கர் தெரு அருகே பரணி பூங்காவில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டி, இந்திரா நகரில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டிகளில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.சிவகங்கை நகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. இடைக்காட்டூர் வைகை ஆறு மூலமும், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.கடந்த சில மாதங்களாக 3 நாட்களுக்கு ஒரு முறை, 4 நாட்களுக்கு ஒரு முறை வாரத்திற்கு ஒரு முறை என தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் தண்ணீர் தேவை அதிகமாக உள்ளது. சில வாரமாக நகராட்சியில் சில பகுதிகளில் வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக போஸ் ரோடு,மஜித்ரோடு, ஆவாரங்காடு உள்ளிட்ட பகுதியில் 10 நாட்களுக்கும் மேல் தண்ணீர் வரவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.நகராட்சி நிர்வாகம் முறையாக தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கமிஷனர் கிருஷ்ணாராம் கூறுகையில், இது குறித்த புகார் எதுவும் வரவில்லை.குடி தண்ணீர் தினசரி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புகார் உள்ள தெருக்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி