உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளைகளுக்கு பாதை அறியும் பயிற்சி

காளைகளுக்கு பாதை அறியும் பயிற்சி

சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் இன்று நடைபெறும் மஞ்சுவிரட்டுக்காக காளைகளுக்கு பாதை அறியும் பயிற்சி அளிக்கப்பட்டது.மாட்டுப் பொங்கலை முன்னிட்டு சிங்கம்புணரி கடைவீதியில் இன்று காலை 11:00 மணி முதல் கட்டுமாடு மஞ்சு விரட்டும், தொடர்ந்து தொழு மஞ்சுவிரட்டும் நடத்தப்படும்.காளாப்பூர், சூரக்குடி, பிரான்மலை, முறையூர், சதுர்வேத மங்கலம் உள்ளிட்ட கிராமங்களிலும் மாட்டுப் பொங்கல் வைத்தபிறகு மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை மஞ்சு விரட்டுகள் நடைபெறும்.இம்மஞ்சுவிரட்டுகளில் அவிழ்க்கப்படும் மாடுகளுக்கு நேற்று காலை முதல் மாலை வரை பாதை அறியும் பயிற்சி அளிக்கப்பட்டது. வீட்டு பொங்கல் முடிந்ததோடு விவசாயிகள் மாடுகளை வீட்டிற்கும், மஞ்சுவிரட்டு தொழுவுக்கும் என மூன்று முறை நடக்க வைத்து அழைத்துச் சென்றனர். இப்படி செய்யும் போது காளைகள் வழிதவறி செல்லாமல் நேரடியாக வீடுகளுக்கு வந்துவிடும் என்பதால் பாரம்பரியமாக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை