செஞ்சிலுவை சங்கம் சார்பில் 200 பேருக்கு நலத்திட்ட உதவி
சிவகங்கை: நாட்டரசன்கோட்டையில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. மாவட்ட துணை தலைவர் முத்துப்பாண்டியன் வரவேற்றார்.மாவட்ட துணை தலைவர் கே.கண்ணப்பன் தலைமை வகித்தார். நாட்டரசன் கோட்டை பேரூராட்சி தலைவர் கே.பிரியதர்ஷினி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சங்க ஆலோசகர் பகீரதநாச்சியப்பன், மாவட்ட தலைவர் வி.சுந்தரராமன் முன்னிலை வகித்தனர்.செஞ்சிலுவை சங்க காளையார்கோவில் தலைவர் தெய்வீக சேவியர், துணை தலைவர் ஏ.நாகராஜன், எம்.சுப்பையா, கே.வீரப்பன் பேசினர். மாவட்ட செயலாளர் அனந்த கிருஷ்ணன் நன்றி கூறினார். பயனாளிகள் 200 பேருக்கு இலவசமாக அரிசி, எண்ணெய், சர்க்கரை, பருப்பு, படுக்கை, துண்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.