உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எப்போதுஅரசு ஊழியர்களுக்கு புதிய குடியிருப்பு கட்டுவது

எப்போதுஅரசு ஊழியர்களுக்கு புதிய குடியிருப்பு கட்டுவது

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட மற்ற துறை அலுவலகத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.இவர்கள் குடும்பத்துடன் வசிக்க மருதுபாண்டியர் நகர், 48 காலனியில் இரண்டு கட்டமாக வீட்டு வசதி வாரியம் சார்பில் 798 வீடுகள் கட்டப்பட்டன. ஏ முதல் இ பிளாக் வரையிலான பிரிவுகளில் வசித்த ஊழியர்களிடம் அவர்களது அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் என்ற கணக்கில், ரூ.650 முதல் ரூ.3500 வரை மாத வாடகை வசூலிக்கப்பட்டது.தற்போது இந்த வீடுகள் அனைத்தும் பராமரிப்பின்றி, கூரை, ஜன்னல், சுற்றுச்சுவர் சேதமுற்றுள்ளன. வசிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால் இந்த வீடுகளில் குடியேறிய ஊழியர்கள் சிலர் வெளியேறி வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.ஆண்டாண்டு காலமாக சேதமடைந்த வீடுகள் பூட்டியே கிடப்பதால், விஷ ஜந்துக்களின் கூடாரமாகி விட்டது. அரசு விதிப்படி, வீட்டு வசதி வாரியம் கட்டிய வீடுகள் 30 ஆண்டுகளை கடந்து விட்டது.ஆனாலும் சி பிளாக்கில் உள்ள வீடுகளில் அரசு ஊழியர் குடும்பங்கள் குடியிருக்க தகுதியில்லாதவை என அறிவிப்பு செய்த நிலையிலும் அச்சத்துடன் குடியிருந்து வருகின்றனர். சேதமடைந்துள்ள வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு ஊழியர்கள் கூறுகையில், அரசு குடியிருப்பு சேதம் அடைந்திருப்பதால் இங்கு குடும்பத்துடன் வசிக்க அச்சமாக உள்ளது. சி,டி, பிரிவு ஊழியர்களுக்கான குடியிருப்பு முழுமையாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இங்கு தங்காமல் பெரும்பாலான ஊழியர்கள் வெளியூர்களிலிருந்து இங்கு பணிக்கு வரும் சூழல் உள்ளது. சிலர் குடும்பத்தை விட்டு தனியாக வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் அரசு ஊழியர்கள் குடும்பத்துடன் அச்சம் இல்லாமல் வசிக்க சேதமடைந்துள்ள குடியிருப்புகளை அப்புறப்படுத்தி விட்டு புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.சிவகங்கை, ஜூன் 22--சிவகங்கையில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு புதிய குடியிருப்பு கட்டடம் கட்டி அவர்களை சிவகங்கையிலேயே தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்போவது எப்போது என அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை