| ADDED : நவ 18, 2025 04:10 AM
திருப்புவனம்: கார்த்திகை பிறந்த நிலையில் வாழை விவ சாயிகளுக்கு போதிய விலை கிடைக்குமா என எதிர்பார்ப்பில் உள்ளனர். திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கலியாந்துார், கானுார், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு வாழை, ஒட்டு வாழை பயிரிடப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் பூவன், ரஸ்தாளி உள்ளிட்டவைகளும் பயிரிடப்படுகின்றன. வாழை பயிரிடப்பட்ட 10வது மாதத்தில் இருந்து பக்க கன்றுகள் மூலம் வாழை இலை அறுவடை செய்யலாம், வாழைத்தார் வெட்டிய பின் மேலும் நான்கு மாதங்களுக்கு இலைகள் அறுவடை நடைபெறும், ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள் வீதம் நடவு செய்கின்றனர். பெரும்பாலும் முகூர்த்த நாட்களை கணக்கிட்டு வாழை பயிரிடுவார்கள். ஒரு சில விவசாயிகள் அடுத்தடுத்து வாழை பயிரிடுவதால் முகூர்த்த நாட்கள் தவிர மற்ற நாட் களிலும் வாழை அறுவடை நடைபெறும். சீசனை பொறுத்து ஒரு கட்டு 500 ரூபாய் முதல் இரண்டா யிரம் ரூபாய் வரை விலை போகும், பெரும்பாலும் முகூர்த்த நாட்களிலேயே வாழை இலைகள் அதிகளவில் விற்பனையாகும் என்பதால் அந்த சமயத்தில் மட்டுமே கூடுதல் விலை கிடைத்து வருகிறது. மற்ற நாட்களில் அறுவடை கூலிக்கு கூட கட்டுப்படியாகவில்லை என விவ சாயிகள் புலம்புகின்றனர். மதுரை காய்கறி மார்க்கெட்டின் இலை தேவையை பூர்த்தி செய்வது திருப்புவனம் வாழை இலைகள் தான். கடந்த ஒரு மாதமாக ஒரு கட்டு இலை 500 ரூபாய் வரையே விற் பனையாகி வருவது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. வாழை விவசாயிகள் கூறுகையில், கார்த்திகை பிறந்தாலும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் வாழை இலை, காய்களுக்கு போதிய விலை கிடைக்க வாய்ப்பில்லை. இனி ஜனவரியில் தான் வாழை இலை, காய், பழம் ஆகிய வற்றிற்கு உரிய விலை கிடைக்கும், என்றனர். வாரம்தோறும் திருப்பாச்சேத்தியில் வியாழன், ஞாயிறு ஆகிய தினங்களில் வாழை இலை சந்தை நடைபெறும், கடந்த ஒரு மாத காலமாக வியாபாரிகள் அதிகளவில் வராததால் இலைக்கு உரிய விலை கிடைக்கவே இல்லை. வேறு வழியின்றி விவ சாயிகள் அடக்க விலைக்கே விற்பனை செய்து வருகின்றனர்.