மேலும் செய்திகள்
பட்டா இடம் எங்கே கேள்வி கேட்டு முற்றுகை
08-Nov-2024
காரைக்குடி: காரைக்குடி அருகே வேடன் நகர் பகுதி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் சுடுகாடு இருந்த இடம் என புகார் எழுந்த நிலையில் அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துஉள்ளனர்.காரைக்குடி கழனிவாசல்அருகே உள்ள வேடன்நகரில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் வசித்து வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தொடர்ந்து, வேடன் நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காரைக்குடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடந்த இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் 106 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.பட்டா வழங்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான இடம் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து தாலுகா அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். திருவேலங்குடி பைபாஸ் அருகே ஒதுக்கப்பட்ட இடத்தை அளவிடும்பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். நேற்று சம்பந்தப்பட்ட இடம் பிரித்து வேடன் நகர் மக்களுக்கு வழங்கப்பட்டது. அப்பகுதி மக்கள் கூறுகையில், வழங்கப்பட்ட இடம் சுடுகாட்டு பகுதியாக உள்ளது. நிலத்தை தோண்டும் போது எலும்புக் கூடுகள் வருகிறது. இதில், எப்படி வீடுகட்டி குடியிருக்க முடியும். மாவட்ட நிர்வாகம் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.தாசில்தார் ராஜா கூறுகையில், வேடன் நகர் பகுதி மக்களுக்கு, வழங்கப்பட்ட இடம் முறையாக அளந்து வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட இடம் சுடுகாடு இடம் இல்லை.
08-Nov-2024