மேலும் செய்திகள்
மதுரை-தொண்டி இடையே புதிய ரயில் பாதை வேண்டும்
20-Feb-2025
சிவகங்கை: சிவகங்கையில் முதல்வர் அறிவித்த ரூ.169 கோடி திட்டத்திற்கு சட்ட சபையில் அறிவிப்பு வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின் ஜன., 21 ம் தேதி காரைக்குடி வந்தார். அன்று மாலை காரைக்குடியில் ரோடு ேஷா நடத்தி மக்களிடம் மனுக்களை பெற்றார்.ஜன.,22 அன்று காலை சிவகங்கையில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சிவகங்கையில் புதிதாக கலெக்டர் அலுவலக கட்டடம் ரூ.89 கோடியில் கட்டப்படும்.அதே போன்று திருப்புத்துார் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, ஏற்கனவே சிவகங்கை - மதுரை ரோட்டை இணைக்கும் திருப்புத்துாரில் புறவழிச்சாலை அமைத்துள்ளனர்.அதே போன்று திருப்புத்துாரை மையமாக வைத்து மதுரை ---- திண்டுக்கல்- புதுக்கோட்டை ரோட்டில் ரூ.50 கோடியில் புறவழிச்சாலை அமைக்கப்படும். காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போதுள்ள கட்டடத்தில் மாமன்ற உறுப்பினர்கள் அமரவும், கமிஷனர், அதிகாரிகள் அறைக்கு தனியாக புதிதாக ரூ.30 கோடியில் காரைக்குடியில் புதிய மாநகராட்சி கட்டடம் கட்டப்படும் என அறிவித்தார். முதல்வர் அறிவித்து 2 மாதம் கடந்த நிலையில், அறிவித்த ரூ.169 கோடிக்கான திட்டங்களை செயல்படுத்த அரசாணை வெளியிடப்படவில்லை. சிவகங்கையில் முதல்வர் அறிவித்த அனைத்து திட்டங்களையும் சட்டசபை மானியக்கோரிக்கையில் அறிவித்து, விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
20-Feb-2025