உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நீச்சல் போட்டியில் வென்ற வீரர்கள்

நீச்சல் போட்டியில் வென்ற வீரர்கள்

சிவகங்கை, அக்.௩0-- சென்னை வேளச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில நீச்சல் போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். சிவகங்கையை சேர்ந்த மாற்றுத்திறனாளி எம்.சுபஜா 32, 50 மீட்டர் துார பின்னோக்கி நீந்தும் போட்டி,50 மீட்டர் துார ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் முதலிடம் பிடித்து இரண்டு தங்க பதக்கம், பாராட்டு சான்றினை பெற்றார். நவம்பரில் ஐதராபாத்தில் நடக்க உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். அதே போன்று சிவகங்கை மாற்றுத்திறனாளி நாகநாதன் 40, 100 மீட்டர் துாரத்தை ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !