திருமண நாளில் பெண் தற்கொலை
தேவகோட்டை; தேவகோட்டை அருகே ஆனையடிவயலைச் சேர்ந்தவர் மணிவேல் மகள் மதுமிதா 20., இவர் சென்னையில் பணியாற்றிய போது அதே நிறுவனத்தில் பணியாற்றிய புதுச்சேரியைச் சேர்ந்த சேகர் மகன் சேது என்பவரை காதலித்து கடந்த ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ முடிவு செய்தனர்.மதுமிதா ஆனையடிவயலில் பாட்டியுடன் வசித்து வந்தார். மதுமிதா ஜூன் 24ல் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலாயுதபட்டினம் போலீசார் மதுமிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தேவகோட்டை சப்கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் விசாரணை நடத்தி வருகிறார்.