பெண் தற்கொலை; உறவினர்கள் கைது
தேவகோட்டை; தேவகோட்டை கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த நாகரெத்தினம், பாலமுருகன் இருவரும் சகோதரர்கள். நாகரெத்தினம் மனைவி கவிதா. 40., இவர் வீட்டுக்கு அருகிலேயே சகோதரர் பாலமுருகன் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இரண்டு குடும்பத்தாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தகராறின் போது சகோதரர் மனைவி நித்திய கல்யாணி 38., நாகரெத்தினம் மனைவி கவிதாவை திட்டியதால் வேதனையில் கவிதா நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்து போனார். தனது தாயார் தற்கொலைக்கு திட்டியது தான் காரணம் என கவிதாவின் மகள் அகிலா, சித்தி நித்தியகல்யாணி 38., தாத்தா கிருஷ்ணன் 88., மீது போலீசில் புகார் செய்தார். தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.