மேலும் செய்திகள்
தாய் அடித்து கொலை: 14 வயது மகன் கைது
23-Oct-2025
காரைக்குடி: காரைக்குடியில் காரில் வைத்து பெண் கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.காரைக்குடி மருது பாண்டியர் நகர் சேர்ந்தவர் பாண்டி மனைவி (மகேஸ்வரி 38. இவர் நேற்று ஆவுடைபொய்கை அருகே காரில் இறந்த நிலையில் கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தலையில் காயம் 'ஏற்பட்டு இறந்து கிடந்த மகேஸ்வரி உடலை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து டி.எஸ்.பி., கவுதம் உத்தரவி்ன் பெயரில் 'தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மகேஸ்வரிக்கு டிரைவிங் கற்றுக் கொடுத்த காரைக்குடி லட்சுமி நகரை சேர்ந்த (வேலுச்சாமி மகன் சசிகுமார் 33, மகேஸ்வரியுடன், வீட்டுமனை காட்டுவதற்காக காரில் வந்தது தெரிய வந்தது. சசிக்குமாரை பிடித்து விசாரித்த போது தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் மகேஸ்வரி இழுத்தடிப்பு செய்ததால் 'ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த 15 சவரன் தங்க நகை எடுத்துச் சென்று அடகு வைத்துள்ளார். மகேஸ்வரியின் அலைபேசியில் இருந்து கணவர் (பாண்டிக்கு, புரோக்கர் ஒருவரால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சிகுமார் மெசேஜ் அனுப்பி உள்ளார். சசிகுமாரை கைது செய்த போலீசார், அடகு வைத்த நகையையும் மீட்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 5 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
23-Oct-2025