உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு பஸ் மோதல் தொழிலாளி பலி

அரசு பஸ் மோதல் தொழிலாளி பலி

திருப்புத்துார்: திருப்புத்துார்-மதுரை ரோட்டில் சுண்ணாம்பிருப்பு விலக்கு ரோடு அருகில் டூவீலர் மீது அரசு பஸ் மோதியதில் ஒருவர் இறந்தார். மற்றொருவர் காயமடைந்தார். திருப்புத்துார் ஒன்றியம் சோலுடையான்பட்டியைச் சேர்ந்த சின்னக்காளை மகன்கள் மலைச்செல்வன் 40, நெவுலியப்பன் 37. இருவரும் கூலி தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இரவு 8:50 மணிக்கு இருவரும் டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சுண்ணாம்பிருப்பு வழியாக கண்டவராயன்பட்டி சென்றுள்ளனர். அப்போது சுண்ணாம்பிருப்பு விலக்கு ரோட்டிலிருந்து மதுரை ரோட்டிற்கு திரும்புகையில் தேவகோட்டையிலிருந்து மதுரை சென்ற அரசு பஸ் மோதியது. அதில் நெவுலியப்பன் இறந்தார். காயமடைந்த மலைச்செல்வன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருப்புத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை