உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாலையோரத்தில் வேர்களை தேடும் தொழிலாளர்கள்

சாலையோரத்தில் வேர்களை தேடும் தொழிலாளர்கள்

திருப்புவனம்: திருப்புவனத்தில் சாலையோரங்களில் கூலி தொழிலாளர்கள் பலரும் வேர்களை தேடி வருகின்றனர். ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக சித்த மருத்துவத்திற்கும் மவுசு உண்டு, சித்த மருத்துவத்திற்கு தேவையான வேர், இலை, காய், பழங்களை கிராமப்புற தொழிலாளர்கள் பலரும் சேகரித்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். விருதுநகர் மற்றும் கோவை மாவட்டங்களில் சித்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் நேற்று மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் சாலையோரங்களில் வளர்ந்துள்ள சாரநெத்தி, நெருஞ்சி ஆகிய செடிகளின் வேர்களை சேகரித்தனர். மாரியம்மா கூறுகையில்: விவசாய கூலி வேலை பார்க்கின்றோம், வேலை இல்லாத நாட்களில் ஊர் ஊராக சென்று வேர்களை சேகரிக்கிறோம், அதிகமாக சாரநெத்தி வேர் தான் கிடைக்கும் அவற்றை தான் விரும்பி வாங்குகின்றனர். இவற்றை சேகரித்து உலர வைத்து விற்பனை செய்வோம் மழை காலங்களில் செடிகள் அதிகளவில் வளர்ந்திருக்கும், எனவே அப்போது தேடி செல்வோம். நாள் ஒன்றுக்கு செலவு போக 300 முதல் 400 ரூபாய் வரை கிடைக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி