உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முகாமிற்கு குப்பை வண்டியில் வந்த பணியாளர்கள்

முகாமிற்கு குப்பை வண்டியில் வந்த பணியாளர்கள்

காரைக்குடி : காரைக்குடியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமிற்கு துாய்மை பணியாளர்கள் குப்பை வண்டிகளில் அழைத்து வரப்பட்டதற்கு அதிருப்தி எழுந்துள்ளது. காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் பொற்கொடி, மாங்குடி எம்.எல்.ஏ., மேயர் முத்துத் துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கண், காது, மூக்கு, எலும்பு, மனநலம், சர்க்கரை நோய், நுரையீரல் உட்பட பல்வேறு மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். காரைக்குடி மாநகராட்சி மற்றும் சாக்கோட்டை ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு என சிறப்பு பரிசோதனை முகாம் நடந்தது. இதற்காக 400க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பணியாளர் களுக்கு தனி வாகனம் ஏற்பாடு செய்யாமல், குப்பை அள்ளும் லாரிகள், மினி வேன்களில் கூட்டம் கூட்டமாக அழைத்து வரப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி