எழுத்தாளர் பயிற்சி முகாம்
தேவகோட்டை: தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் கோடை கால எழுத்தாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இளமைகனல் மாணவர் இதழ் நடத்திய எழுத்தாளர் இயக்க முகாமிலும், ஓவிய மாணவர்கள் ஜேசார்ட் முகாமிலும் பங்கேற்றனர்.மதுரை மறை இயேசு சபை பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜான் கென்னடி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.கனல் இயக்க முகாம் ஒருங்கிணைப்பாளர் பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா வாழ்த்தினார். உலக புத்தக நாளையொட்டி பாரதியாரின் புதிய ஆத்திச்சூடிக்கான கதைகள் எழுதிய தே பிரித்தோ பள்ளி மாணவர்கள், 5 சிறுகதை எழுதிய சூராணம் புனித ஜேம்ஸ் பள்ளி மாணவியர் கவுரவிக்கப்பட்டனர்.தேவகோட்டை அரசு தலைமை நுாலகர் சூரச்சந்திரன், எழுத்தாளர் சங்க மாநில பொருளாளர் கார்த்திகா, உஷாராணி, ஆசிரியர் துஷ்யந்த் சரவணராஜ், ஆசிரியை ஜோதி, அமலன், மைதீன் கவிதை எழுத பயிற்சி அளித்தனர். தலைமையாசிரியர் சேவியர்ராஜ் தலைமை வகித்து மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.