உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளம் படைப்பாளர் போட்டி

இளம் படைப்பாளர் போட்டி

திருப்புத்துார்; தென்கரை மவுண்ட் சீயோன் சில்வர் ஜுபிலி சி.பி.எஸ்.இ.பள்ளியில் புதிய படைப்பாளி மாணவர்கள் பங்கேற்ற விக்ஸித் பாரத் பில்டத்தான் 2025 நடந்தது. விக்சித் பாரத் பில்டத்தான் 2025 பள்ளி அளவிலான கண்டுபிடிப்பு போட்டியாக நடத்தப்படுகிறது. இது மத்திய அரசின் அடல் இன்னோவேஷன் மிஷன், நிதி ஆயோக், ஏ.ஐ.சி.டி.இ., ஆகியவற்றுடன் இணைந்து கல்வி அமைச்சகத்தால் செப்.23 ல் துவக்கப்பட்டது. இளம் கண்டுபிடிப்பாளர்களின் பங்களிப்பால் நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி இப்பள்ளியின் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் 70 அணிகள் பங்கேற்றன. மாணவர் அணிகள் செயல்படும் முன்மாதிரிகள், செயல்படுத்ததக்க படைப்பு, சிந்தனை மற்றும் நேர்மறையான தாக்கம் ஏற்படுத்தும் திட்டங்களை வடிவமைத்தனர். இளம் கண்டுபிடிப்பாளர்கள், 'வல்லரசு இந்தியா 2047'க்கான கனவுகளை நனவாக்குகிறார்கள் என்று நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மாணவர் அணிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !