வாலிபரிடம் ரூ.27.28 லட்சம் மோசடி
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரியாஸ், 29; பழைய இரும்புக்கடைக்காரர். இவரது, 'வாட்ஸாப்' எண்ணிற்கு நவ., 10ல் ஒரு லிங்கில் இருந்து குறுஞ்செய்தி வந்தது.அந்த லிங்கில் முகமது ரியாசை தொடர்பு கொண்ட நபர், ஒரு நிறுவனத்தின் பெயரைக்கூறி, அதில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். அதை நம்பிய முகமது ரியாஸ், அவர் கூறிய ஆறு வங்கி எண்களுக்கு, 11 பரிவர்த்தனைகளில் ஆன்லைனில், 27.28 லட்சம் ரூபாயை மாற்றியுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் முதலீடு செய்த அந்த பணத்திற்கு லாபத்தொகை எதுவும் தரமால், மீண்டும் பணம் கேட்டுள்ளார். சந்தேகமடைந்த முகமது ரியாஸ் போலீசில் புகார் அளித்தார். சிவகங்கை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார், மோசடி நபரை தேடுகின்றனர்.