உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளைஞர் வெட்டி படுகொலை

இளைஞர் வெட்டி படுகொலை

மேலூர்: மேலூர் அருகே இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நண்பர்கள் உட்பட மூன்று பேர் கைது. மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குத்தெருவைச் சேர்ந்த ஆடு வளர்க்கும் தொழிலாளியான விவேக் (27) என்பவர். அருகேயுள்ள ஆட்டு கொட்டகையில் கடந்த 16ஆம் தேதி இரவு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இதனைத்தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மேலூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகொலை செய்யப்பட்ட விவேக்கின் உடலை கைப்பற்றி, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், விவேக்கின் நண்பர்களான கனிபாண்டி, சீமான், மற்றும் மலைவீரன் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியதில், கடந்த தீபாவளியன்று மது அருந்தும் போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக விவேக்கை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து, மூவரையும் கைது செய்த மேலூர் இன்ஸ்பெக்டர்சிவசக்தி தலைமையிலான காவல்துறையினர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ