உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளைஞர் கொலை: இருவர் கைது

இளைஞர் கொலை: இருவர் கைது

காரைக்குடி : காரைக்குடியில் இளைஞரை கொலை செய்த வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். காரைக்குடி சேர்வார் ஊருணியைச் சேர்ந்தவர்சேட்டு மகன் மனோ என்ற மனோஜ் குமார் 21. மார்ச் 21ம் தேதி, காரைக்குடி போலீஸ் ஸ்டேஷனில்நிபந்தனை ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பினார். காரில் வந்த சிலர் நுாறடி சாலையில் வைத்து மனோஜ் குமாரை வெட்டி கொலை செய்தனர். போலீசார் அண்ணாநகரைச் சேர்ந்த குரு பாண்டி 23, ராமநாதபுரம்மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த சுரேஷ் 24, மதன் 22, பாலா 25, சக்திவேல் 24, காரைக்குடி அண்ணாநகர் விக்னேஸ்வரன் 22 ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். குருபாண்டி, விக்னேஷ், சக்திவேல் மூவரையும் போலீசார் கைது செய்த நிலையில், மற்ற மூவரும் தலைமறைவாகினர். இந்நிலையில் மதன் 21 மற்றும் பாலமுருகன் 23 இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி