உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குரூப் 2 தேர்விற்கு சென்ற இளைஞர் தற்கொலை

குரூப் 2 தேர்விற்கு சென்ற இளைஞர் தற்கொலை

திருப்புவனம்; திருப்புவனம் அருகே அல்லிநகரத்தில் குரூப் 2 நேர்முக தேர்விற்கு சென்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். அல்லிநகரம் ராஜேந்திரன் மகன் நடராஜன் 27, குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று திருப்புவனம் யூனியன் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். குரூப் 2 தேர்விற்காக உழைத்து வெற்றி பெற்றார். சென்னையில் நேர்முக தேர்விற்கு பங்கேற்க சென்றார். இந்நிலையில் சென்னையில் இருந்து 26ம் தேதி காலையில் வந்தவர் யாரிடமும் சரியாக பேசவில்லை. நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்ற பின் மன உளைச்சலில் வீட்டில் மின்விசிறியில் துாக்கி ட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என டைரியில் எழுதி வைத்துள்ளார். படிப்பறிவு அதிகம் இல்லாத குடும்பத்தில் பிறந்து வெற்றி பெற்றும் சரியான வழிகாட்டல் இன்றி அரசு ஊழியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி