| ADDED : ஏப் 28, 2024 01:22 AM
தென்காசி: குட்கா கடத்திய வழக்கில் கைதான தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வியின் கணவர் சுபாஷ் சந்திர போஸ், 53, தி.மு.க.,வில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.சுபாஷ் சந்திர போஸ் ஆலங்குளம் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலராகவும் உள்ளார். இவரது காரில் குட்கா கடத்துவதாக கிடைத்த தகவலின்படி நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணிக்கு சிவகிரி அருகே தென்மலையில் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். காரில் அவர் கடத்திய 440 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.சுபாஷ் சந்திர போஸ், டிரைவர் லாசரை போலீசார் கைது செய்து திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தனர். போஸ் மீது ஏற்கனவே போதை பொருட்களை கடத்திய வழக்குகள் உள்ளன. அவர் தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.அவருடன் கட்சியினர் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.