| ADDED : ஏப் 27, 2024 01:27 AM
தென்காசி:தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் தமிழ்ச்செல்வி. இவரின் கணவர் போஸ், 51. இவர் காரில் வெளிமாநிலங்களில் இருந்து குட்கா போதை பாக்கெட்டுகளை கடத்தி விற்பதாக புகார் எழுந்தது. நேற்று அதிகாலை 2:00 மணிக்கு சிவகிரி அருகே தென்மலை பகுதியில் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ராஜபாளையத்தில் இருந்து தென்காசிக்கு தேசிய நெடுஞ்சாலையில் வராமல் தளவாய்புரம் -- தென்மலை -- ராயபுரம் வழியாக செல்ல முயன்ற ஒரு காரை தென்மலையில் போலீசார் மடக்கினர்.அந்த காரில் போஸ், டிரைவர் லாசர் இருந்தனர். 20 மூட்டைகளில் 600 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும். காரையும் போதை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்த போலீசார், போஸ், லாசரை கைது செய்து, சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின் திருநெல்வேலி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.கைதான போஸ் மீது ஏற்கனவே தென்காசி மாவட்டத்தில் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.