உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / லோடு ஆட்டோ கவிழ்ந்து மூன்று பெண்கள் பலி

லோடு ஆட்டோ கவிழ்ந்து மூன்று பெண்கள் பலி

தென்காசி:தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த விவசாய பெண் கூலி தொழிலாளர்கள் 12 பேர், சுரண்டை அருகே வாடியூரில் நடக்கும் விவசாய பணிக்காக லோடு ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்டனர். தேவேந்திரன் 25, ஆட்டோவை ஓட்டினார். வாடியூர் அருகே ஒரு வளைவில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஜானகி 52, வள்ளியம்மாள் 60, பிச்சி 60 ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். தேவேந்திரன் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். சுரண்டை போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.விவசாயம் மற்றும் கட்டட பணிகளுக்கு தொழிலாளிகளை சரக்கு வாகனங்களில் ஏற்றிச் செல்வதால் இத்தகைய உயிர்ப் பலிகள் ஏற்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ