மிளகாய் பொடி துாவி தொழிலாளி மீது தாக்குதல்
தென்காசி; தென்காசியில் பட்டப்ப கலில் கூலி தொழிலாளி ஒருவரை மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி, மது பாட்டிலை உடைத்து கழுத்து மற்றும் கைகளில் குத்தி தாக்கினர். சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற கூலி தொழிலாளி, தென்காசி யானைப்பாலம் அருகே உள்ள கோயில் மடத்தில் படுத்திருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது கண்களில் மிளகாய் பொடி துாவி பின்னர் மது பாட்டிலை உடைத்து அவரது கழுத்து மற்றும் கைகளில் சரமாரியாக குத்தி தாக்கினர் . காயமடைந்த ரமேஷை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.