உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / தன்னுடன் பழக மறுத்த பெண்ணை கொலை செய்தவர் கைது

தன்னுடன் பழக மறுத்த பெண்ணை கொலை செய்தவர் கைது

தென்காசி:பாவூர்சத்திரம் அருகே பழக மறுத்த பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பனையடிப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவன் 45. கடை வைத்துள்ளார். இவரது மனைவி உமா 37. இரு மகன்கள் உள்ளனர். பரமசிவன், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போது பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிக்குமார் 44, உதவி புரிந்தார். அடிக்கடி வீட்டுக்கு வந்தவர், உமாவிடம் தவறுதலாக பழக ஆரம்பித்தார். இதையறிந்த பரமசிவன் மணிக்குமாரை கண்டித்தார். எனவே உமா, மணிக்குமாரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரமுற்றவர் ஜூன் 1 அதிகாலையில் உமா வீட்டில் தனியே துாங்கி கொண்டிருந்தபோது கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். பின்னர் கேரளாவுக்கு தப்பி ஓடி விட்டார். பாவூர்சத்திரம் போலீசார் மணிக்குமாரை கைது செய்தனர். நட்புடன் பழகி வந்தவர், பேச்சை நிறுத்தியதால் தொடர்ந்து தன்னுடன் பழகுமாறு போனில் வற்புறுத்தினேன். அவர் அதற்கு உடன்படாததால் கொலை செய்தேன் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ