உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / பா.ஜ., நிர்வாகி மீது போக்சோ

பா.ஜ., நிர்வாகி மீது போக்சோ

தென்காசி: தென்காசி மாவட்டத்தில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் மீது, போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், 2022ல் பிளஸ் 2 பயின்றார். தற்போது, கல்லுாரியில் படித்து வருகிறார். சுரண்டை அருகே சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன், 55; பா.ஜ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் தனியார் பஸ் கம்பெனி மேலாளர். துப்பாக்கியை காட்டி அந்த பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது. பின், மொபைல் போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி, அந்த பெண்ணை தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்தார். உயர் நீதிமன்றம் மதுரை கிளை, நீலகண்டன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் பிறகும், போலீசார் வழக்கு பதியாமல் தாமதப்படுத்தினர்.இதுகுறித்து, டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹதிமனியிடம், மாணவி புகார் செய்தார். டி.ஐ.ஜி., உத்தரவின்படி, நீலகண்டன் மீது, போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை