உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / கடத்தலுக்கு துணைபோகாத போலீஸ்காரர் கொலை மிரட்டலால் ராஜினாமா கடிதம்

கடத்தலுக்கு துணைபோகாத போலீஸ்காரர் கொலை மிரட்டலால் ராஜினாமா கடிதம்

தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் ஸ்டேஷனில் முதல் நிலை காவலராக பணிபுரிபவர் பிரபாகரன், 32. இவர். 2013ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். மூன்று மாதங்களாக சிவகிரி ஸ்டேஷனில் பணிபுரிந்தார். டிச., 18ல் அவர் பணியில் இருந்த போது, டிராக்டரில் எம் சாண்ட் மணலை சுரங்கத் துறையினர் பாஸ் இல்லாமல் எடுத்து சென்றனர். சிவகிரி நீதிமன்றம் அருகே அந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸ்காரர் பிரபாகரன், அதை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.அதுபோல, ஜல்லிக்கற்களை ஏற்றிய டிராக்டர், மணல் ஏற்றிய இரண்டு மாட்டு வண்டிகளையும் பிடித்து ஸ்டேஷனில் ஒப்படைத்தார். வாகனங்களை பறிமுதல் செய்ய முயன்ற போது வாகன உரிமையாளர்கள் பிர-பாகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதற்கிடையே, பறிமுதல் வாகனங்களை மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடமே போலீசார் ஒப்ப-டைத்தனர். சுரங்க துறையினர் பாஸ் போலியாக தயாரித்துள்ளதாகவும் பிரபாகரன் தெரிவித்தும் யாரும் கண்டு-கொள்ளவில்லை. மனமுடைந்த பிரபாகரன், டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு ராஜினாமா கடிதத்தை நேற்று அனுப்பினார். கடிதத்தில் அவர் கூறியுள்ளதா-வது:முறையான அனுமதியின்றி கனிம வளம் எடுத்து சென்ற வாகனங்களை நிறுத்திய போது பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். வாகனங்களையும் கைப்பற்றி அபகரித்து எடுத்து சென்-றனர். மேலும் ஒரு நபர், 'இப்போது தான் ஸ்டேஷனிலிருந்து ஒரு வாகனத்தை எடுத்துட்டு வந்தேன். திரும்-பவும் எங்கள் ஏரியா வாகனத்தை பிடித்தால் வேற மாதிரி ஆயிடும்' என கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பணிபுரிய அச்சமாக உள்ளது.காவலர்களின் உயிருக்கு எந்த பாதுகாப்பும் இன்றி, மணல் கடத்தும் மாபியாக்களின் பிடியில் உள்ளதுடன் கடத்தலுக்கு உடந்தையாக நிற்கும் உயரதிகாரிகளை கண்டு அச்சமாக உள்ளது. மணல் மாபியாக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஆதாரங்களை இணைத்துள்ளேன். என்மீது தாக்குதல் நடந்தால் மணல் மாபியாக்கள் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தான் காரணம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை