ரூ.19 லட்சம் கொள்ளை
தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி பஜனை மடத்தெருவை சேர்ந்த விவசாயி முனியசாமி 75. இவர்களது 3 மகன்கள் திருமணமாகி வெளியூர்களில் வசிக்கின்றனர். இங்குஉள்ள வீட்டில் தனியாக வசித்த இவர் நேற்று காலை வயலுக்கு சென்று விட்டார். மர்ம நபர்கள் வீட்டின் சமையல் புகைப் போக்கி வழியே உள்ளே புகுந்து பீரோவில் இருந்த அறுவடையான நெல் மூடைகளை விற்று வைத்திருந்த ரூ.19 லட்சத்தை பையுடன் எடுத்துச்சென்றனர். செயின் பறிப்பு: திருநெல்வேலி வண்ணார்பேட்டை வேணுகோபால் மனைவி முத்துலட்சுமி 87. நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தார். டூவீலரில் வந்த இருவர் அவரது வீட்டுக்குள் சென்று அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.