உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / தென்காசி முதியோர் இல்ல பலி எண்ணிக்கை 4 ஆனது காப்பக உரிமையாளர் கைது

தென்காசி முதியோர் இல்ல பலி எண்ணிக்கை 4 ஆனது காப்பக உரிமையாளர் கைது

தென்காசி : தென்காசி அருகே முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமையால் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்கு ஆனது. காப்பகம் நடத்திய ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் அருகே கீழ பாட்டாகுறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் 50, என்பவர் அன்னை முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். 60 பேர் தங்கியிருந்தனர். ஜூன் 11 ம் தேதி இரவு உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டது. உணவு ஒவ்வாமையால் 11 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி செங்கோட்டையை சேர்ந்த சங்கர்கணேஷ் 48, முருகம்மாள் 55 சொக்கம்பட்டியை சேர்ந்த அம்பிகா 40 ஆகியோர் இறந்தனர்.இருவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.சிகிச்சையில் இருந்த மதுரையை சேர்ந்த தனலட்சுமி 70, என்பவர் நேற்று காலை இறந்தார். இதையடுத்து இறந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆனது. மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட செல்வராஜ் உட்பட சிலர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதியோர் காப்பகத்தில் ஜூன் 8ம் தேதி கிடைத்த இறைச்சியை சமைத்து சாப்பிட்டுள்ளனர். பிறகு மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிட வழங்கியுள்ளனர். இதனால் உணவு விஷமாகி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.முதியோர் காப்பகத்திற்கு தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா சீல் வைத்தார். உரிமையாளர் ராஜேந்திரன் 50, கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை