பாலருவி ரயிலில் இருந்து தள்ளிவிட்டு தூத்துக்குடி தொழிலாளி கொலை * தென்காசியை சேர்ந்த 7 பேர் கைது
தென்காசி:கேரள மாநிலம் புனலூர் அருகே பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தகராறில் தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலாளி செந்தில் குமாரை 46, கீழே தள்ளிவிட்டு கொலை செய்த தென்காசியைச் சேர்ந்த ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் 46. கேரள மாநிலம் செங்கனூரில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் பாலக்காட்டில் இருந்து தூத்துக்குடி செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் பயணித்தார். அப்போது அப்பெட்டியில் பயணித்த தென்காசியைச் சேர்ந்த சிலர் அவருடன் தகராறு செய்தனர். ரயில் ஓடிக் கொண்டிருக்கும் போதே அவரை பெட்டியில் இருந்து கீழே தள்ளி விட்டனர். இதில் செந்தில்குமார் இறந்தார். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. ரயில் புனலூரில் நிறுத்தப்பட்டது. செந்தில்குமார் உடல் மீட்கப்பட்டது. ரயில்வே போலீசார் விசாரித்து செந்தில் குமாரை கீழே தள்ளிய தென்காசியைச் சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.