மேலும் செய்திகள்
டாக்டர் வீட்டில் 66 சவரன் திருடிய பணிப்பெண் கைது
27-Sep-2024
ஆலங்குளம்:ஆலங்குளத்தில் புதையல் ஆசை காட்டி உறவினரிடம் 18 சவரன் தங்க நகைகளை ஏமாற்றிய இருவரை போலீசார் கைது செய்தனர்.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காந்தி தெருவைச் சேர்ந்தவர் முத்துசெல்வம், 32. லாரி கிளீனர். பகுதி நேரமாக ஜோதிடம் பார்க்கிறார். இவரது உறவினர் அதே பகுதியில் வசிக்கும் செல்லத்தாய்,60, என்பவரிடம் வீட்டில் உள்ள தங்க நகைகளை கொடுத்தால் ஆறு மாதங்களில் இரட்டிப்பாக்கி தருவதாக கூறினார்.அதை நம்பிய செல்லத்தாய், வீட்டில் இருந்த 144 கிராம் தங்க நகைகளை கொடுத்தார். அந்த நகைகளை ஒரு மண் பானையில் வைத்து சில பூஜைகளை செய்த முத்து செல்வம், மறைவான இடத்தில் வைத்து, ஆறு மாதங்கள் கழித்து, திறந்து பார்க்கும்படி கூறியுள்ளார்.ஆனால், மூன்று மாதங்களுக்கு பின் செல்லத்தாய் அதை திறந்து பார்த்த போது, அதில் நகைகள் இல்லை.இதுகுறித்து செல்லத்தாய், முத்து செல்வத்திடம், நகையை திருப்பி தராவிட்டால், போலீசில் புகார் அளித்து விடுவதாக் கூறியதால், 3 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். கூடுதல் பணத்தை கொடுக்க தாமதமானதால், செல்லத்தாய் ஆலங்குளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.முத்து செல்வம் மற்றும் நகையை விற்பனை செய்ய உடந்தையாக இருந்த சுரண்டை ஆலடிப்பட்டியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் மாரிசெல்வம், 36, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.இதுதொடர்பாக மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
27-Sep-2024